மதுரை: வெள்ள அபாய எச்சரிக்கை.. மக்களே கவனம்

1134பார்த்தது
மதுரை: வெள்ள அபாய எச்சரிக்கை.. மக்களே கவனம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் முதல் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி, மதுரை மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 7) முதல் 6 நாட்களுக்கு அணையில் இருந்து மொத்தம் 428 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி