மதுரை: முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு

2பார்த்தது
மதுரை: முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு
மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், தனியார் நிறுவன மேலாளருமான சரவணசேகர் (58), சனிக்கிழமை அதிகாலை கோவைக்கு பணி நிமித்தமாக செல்வதற்காக காரை சுத்தம் செய்யும்போது வைகை ஆற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி