மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் அரசு அருங்காட்சியகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் அக்டோபர் இறுதியில் நிறைவடைந்து, அருங்காட்சியகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின்போது மதுரை ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், அரசு அச்சகம் மற்றும் தமிழ் காட்சிக் கூடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.