மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெக்ஸா ஸ்கேன் கருவியை தொடங்கிவைக்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. அமைச்சர் வரும் வழியில் பினாயில் தெளிக்கப்பட்டதும், நோயாளிகள், உறவினர்கள் அமைச்சர்களுக்கு எதிரே வரக்கூடாது என பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.