மதுரை: புனித லூர்து அன்னை ஆலயத் தேர் பவனி

3பார்த்தது
மதுரை: புனித லூர்து அன்னை ஆலயத் தேர் பவனி
கோ. புதூா் புனித லூா்து அன்னை ஆலயத்தின் 106-ஆவது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமை வகித்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றி வைத்தாா். புனித லூா்து அன்னை, டான் போஸ்கோ, புனித அந்தோணியாா், புனித சூசையப்பா், மிக்கேல் அதிதூதா் ஆகியோரின் திருவுருவம் தாங்கிய தோ்கள் ஆலய முகப்பிலிருந்து தொடங்கி பல்வேறு சாலைகள் வழியாக வலம் வந்து நிறைவடைந்தன. இதில் மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி