மதுரை: விஏஓ பணியிடங்களை நேரடியாக நிரப்ப இடைக்கால தடை

68பார்த்தது
மதுரை: விஏஓ பணியிடங்களை நேரடியாக நிரப்ப இடைக்கால தடை
வருவாய்த் துறை ஆணையர் அறிவித்த 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை, பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை நேரடியாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த இடமாற்றங்களுக்கு அனுபவத்தைக் கருத்தில் கொள்ளாமல் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, வருவாய்த் துறைச் செயலாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you