மதுரை: பாடலாசிரியர் மதன் கார்க்கி பேட்டி

2பார்த்தது
கல்வி குழுமம் மற்றும் சில்வர் ஜோன் இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட்” தொடக்க விழா மதுரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் மதன் கார்க்கி பங்கேற்றார். ஜனவரி 20 மற்றும் 30 ஆம் தேதிகளில் உலகம் முழுவதும் தமிழ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஒலிம்பியாட்களைத் தொடர்ந்து, தற்போது 45 நாடுகளில் தமிழ் மொழிக்காக இந்த ஒலிம்பியாட் நடத்தப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை சுலபமாக்கும் அதே வேளையில் சிலரின் வேலையைப் பறிக்கும் என்றும் மதன் கார்க்கி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி