மதுரை தூய்மையற்ற நகரம்.. சமூக ஆர்வலர் செயல்

1பார்த்தது
மதுரை தூய்மையற்ற நகரம்.. சமூக ஆர்வலர் செயல்
2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலில் மதுரை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. வரி முறைகேடு, மேயர், மண்டலத்தலைவர்கள் ராஜினாமா போன்ற பிரச்சனைகளால் ஆட்சியாளர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இது மதுரை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மன்னர்கள் ஆட்சி காலத்தில் வழங்குவது போன்ற வாழ்த்து மடலையும், பட்டு சால்வையையும் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி