மதுரை: நகை திருட்டு.. அரசு இழப்பீடு வழங்க உத்தரவு

0பார்த்தது
மதுரை: நகை திருட்டு.. அரசு இழப்பீடு வழங்க உத்தரவு
நகை திருட்டு வழக்கு தொடர்பாக, குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத பட்சத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை காவல்துறையினர் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமை மிக்க அதிகாரிகள் கொண்ட சிறப்பு பிரிவை மாவட்டம் தோறும் அமைக்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி