விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், நத்தம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த தரி நெய்யும் மணி என்பவரின் மகள் செல்வராணி வயது 13 என்பவர் வீட்டில் பெற்றோர் திட்டியதால் எங்காவது செல்லலாம் என எண்ணி நேற்று முன்தினம் (டிச.26) இரவு 09.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி நேற்று சென்னை செல்லலாம் என எண்ணி மதுரை இரயில் நிலையம் நடைமேடை எண் - 1ல் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்தார்.
அந்த சிறுமியை பணியில் இருந்த பெண் தலைமை காவலர் ராணி என்பவர் விசாரித்து அவருக்கு அறிவுரை வழங்கி அவரின் பெற்றோர் மற்றும் இது சம்பந்தமாக காணமல் போன வழக்கு பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து குழந்தைகள் நல குழுமம் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தார்கள்.