மதுரை: மகாசிவராத்திரி.. இரவு முழுவதும் மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பு

676பார்த்தது
மதுரை: மகாசிவராத்திரி.. இரவு முழுவதும் மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை (15-ந் தேதி) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இரவில் அம்மன் சன்னதியில் 4 கால பூஜைகள் இரவு 10 மணி முதல் 1.40 மணி வரையிலும், சுவாமி சன்னதியில் 11 மணி முதல் 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்தசாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது. பக்தர்கள் அபிஷேகப் பொருட்களை நாளை மாலைக்குள் கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

தொடர்புடைய செய்தி