மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சீரமைப்பு பணிகள் தொடக்கம்

1பார்த்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சீரமைப்பு பணிகள் தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகளைத் தவிர்த்து, 415 பரிவார தெய்வங்கள் மற்றும் கொடிமரத்திற்கான சீரமைப்பு பணிகள் தொடங்குகின்றன. நேற்று முன்தினம் பாலாலய பூஜை தொடங்கியது. ஸ்தானிக பட்டர்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, 415 பரிவார தெய்வங்களை சித்திரமாக வரைந்து உருவேற்றினர். பின்னர், பரிவார தெய்வங்களுக்கு பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி