மதுரை: வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி

63பார்த்தது
மதுரை: வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி
வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி வழங்கப்படுவதில்லை என சில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதில் எந்த மாற்றமும் இல்லை. தெற்கு ரயில்வே பகுதியில் இயக்கப்படும் 7 வந்தே பாரத் ரயில்களில் மே 30 அன்று 603 அசைவ சிற்றுண்டிகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் மே 31 அன்று 6 வந்தே பாரத் ரயில்களில் 1302 பயணிகளுக்கு அசைவ சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. 

எனவே பயணிகள் வந்தே பாரத் ரயில்களுக்கு பயண சீட்டு பதிவு செய்யும்போது அசைவ உணவை தொடர்ந்து தேர்ந்தெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி