மதுரை: கல்லூரி முன்பாக அலட்சியமாக நடைபெறும் மேம்பால பணிகள்

84பார்த்தது
மதுரை தல்லாகுளம் முதல் நெல்பேட்டை வரை மேம்பாலம் அமைப்பதற்காக 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரையிலும், கோரிப்பாளையம் முதல் வைகை ஆற்று வழியாக நெல்பேட்டை வரையிலும், செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வரை என பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மீனாட்சி கல்லூரி முன்பாக மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

 மாணவிகள் நடந்துசெல்லும்போதே மேம்பால பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ராட்சத கான்கிரீட் வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே பின்புறமாக (ரிவர்ஸில்) வருவதும், அப்பொழுது மாணவிகள் அச்சத்துடன் அங்கும் இங்கும் ஓடும் நிலை உள்ளது. மேலும் கல்லூரி சுற்றுசுவரை ஒட்டி மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் உள்ள நிலையில் ஒரு புறம் பள்ளம், ஒரு புறம் ட்ரான்ஸ்ஃபார்மர், நடுவே ராட்சத வாகனங்கள் இயக்கப்படுவதால் கல்லூரி மாணவிகள் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாணவிகள் அச்சத்துடன் ஆபத்தான முறையில் நடந்துசெல்கின்றனர்.

 மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவிகளுக்கான உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மாணவிகள் கல்லூரிக்கு சென்று வரும்போது பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி