மதுரை, தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கனிமொழி கருணாநிதி, மக்களின் எதிர்பார்ப்புகளும், பகுதிவாரியான தேவைகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற கடந்த தேர்தல் வாக்குறுதியை நினைவு கூர்ந்த அவர், தற்போது மூடக்கோரி மக்கள் கோரிக்கை வைக்கவில்லை என்றும், இதுகுறித்த கொள்கை முடிவுகள் எதிர்கால தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.