மதுரை: போலீஸ் வாகனம் மோதி விபத்து;2வது நாளாக தொடரும்போராட்டம்

0பார்த்தது
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத், அவரது மனைவி சத்யா, மகன் அஷ்வின் ஆகியோர் உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு பைக்கில் திரும்பும்போது, சக்குடி அருகே காவல்துறையினரின் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த சோனை ஈஸ்வரி காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டி, காவலர்கள் மீது வழக்குப்பதிவு, அரசுப்பணி, இழப்பீடு, காயமடைந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி