மதுரை: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

1பார்த்தது
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அவர்லேண்ட் ஒப்பந்த நிறுவனத்திடம் கூடுதல் பணி செய்ததற்கான ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது, இனிமேல் போராட்டம் செய்ய மாட்டோம், வார விடுப்பில் ஊதியம் கேட்க மாட்டோம் என கையெழுத்திட வேண்டும் என ஒப்பந்த நிறுவனம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டலங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனை கண்டித்து, காளவாசல் பகுதியில் பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வார்டு பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்கிறது. தொடர் பிரச்சனைகளால் மதுரை மாநகராட்சியின் தூய்மை கேள்விக்குறியாகி, நகரம் குப்பையாக காட்சி அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி