மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி தானியலட்சுமி (16), சிலம்பத்தில் மாநில, மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்தவர். கடந்த 3 மாதங்களாக கைகளில் ஏற்பட்ட வலியால் சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்குச் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். சிலம்பம் விளையாட முடியாமல் போனதே என்ற வருத்தத்தில் தானியலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.