மதுரை: பி.டி.ஆர் மீது சுந்தர்.சி காட்டம்

0பார்த்தது
மதுரை மத்திய தொகுதியின் NDA வேட்பாளர் நடிகர் சுந்தர் சி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் கேட்கும் கேள்விகளுக்கு பிடிஆர் பதில் சொல்லி இருப்பார். 10 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்தும், மத்திய தொகுதியில் சாலைகள், கழிவுநீர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை வசதி கூட ஏற்படுத்தி தரவில்லை. அறிவுள்ள எவரும் கேட்கக்கூடிய கேள்விதான் நான் கேட்டது. பிடிஆர் தனது அறியாமையை ஒப்புக்கொண்டுள்ளார். கேள்வி கேட்க அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன். மதுரை வளர்ச்சிக்கு உங்களை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள் என்றால், ஏன் அந்த கட்சியில் வேட்பாளராக நிற்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி