டெல்லியில் செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில், ரயில் நிலையம், விமான நிலையம், திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.