மதுரை: டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

2பார்த்தது
மதுரை: டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மதுரை பழங்காநத்தம் அருகே மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. 23 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பணி வரன்முறை, காலமுறை ஊதியம், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடுதல், இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயித்தல், கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன தலைவர் பி. முருகன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாவட்ட தலைவர் எம். பாலசுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் (பொறுப்பு) தி. நாகராஜன், சிஐடியூ மாநில செயலாளர் பி. என். தேவா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியூ மாநில செயலாளர் இரா. லெனின் நிறைவுரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி