மதுரை சுப்பிரமணியபுரம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளிடம் வகுப்பறைகளில் ஆபாசமாக பேசுவதுடன், ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்தும் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் அமைதி காப்பதாக புகார் எழுந்ததையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.