மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஆட்டிறைச்சி கிலோ ₹750 முதல் ₹900 வரையிலும், எலும்பில்லா ஆட்டிறைச்சி ₹1200 வரையிலும் விற்பனையானது. கோழி இறைச்சி கிலோ ₹210 முதல் ₹280 வரையிலும், உயிர் கோழி ₹210 அளவிலும் விற்பனையானது. சில பகுதிகளில் தோல் நீக்கப்பட்ட கோழி ₹240 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.