மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வைகை ஆற்றுக்குள் கட்டப்படும் இந்தப் பாலம் பிப்ரவரி மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. இதற்காக, ஜனவரி 10 அல்லது 11 ஆம் தேதி முதல் கோரிப்பாளையம் சாலையை, மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் தொடங்குகின்றன. இதன் காரணமாக, கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து மீனாட்சி கல்லூரி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி, சர்வீஸ் சாலை வழியாக ஏவி மேம்பாலம் செல்ல மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.