மதுரை: கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றும்

4பார்த்தது
மதுரை: கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றும்
மதுரை மாநகா், கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் காரணமாக, தமுக்கம் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்லும் இடதுபக்க சாலை மூடப்பட்டுள்ளது. தற்போது வலதுபக்கச் சாலையிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால், அழகா்கோவில் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தமுக்கம் சந்திப்பிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட இடதுபக்கச் சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி