மதுரை: அரசு பேருந்து மோதி 3 வயது சிறுமி பலியான சோகம்

14பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குவலையப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து சிறுமி மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூவலிங்கம் - சினேகா தம்பதியின் 3 வயது மகள் சபூவரசி உயிரிழந்தார். ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி, குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி