மதுரை அழகப்பன்நகரைச் சேர்ந்த சாமிநாதன் (25) மற்றும் வில்லாபுரம் டி.என்.எச்.பி. குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஷா உசேன் (29) ஆகியோர் மீது வழிப்பறி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் உத்தரவின் பேரில், இருவரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.