மதுரை: பிரபல ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த இருவர் கைது.

4பார்த்தது
மதுரை: பிரபல ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த இருவர் கைது.
மதுரை மாநகரில் எம்.கே. படத்தைச் சேர்ந்த இளைஞர் முத்துமணி போஸ் நேற்றிரவு ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளர்களான சரவணக்குமார் (19) மற்றும் கார்த்திகேயன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் ஜூலை 11ஆம் தேதி நடந்த சிவமணி கொலை வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்ட நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் முத்துமணி போஸை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி