மதுரை: கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு 4 மாதங்கள் சிறை

59பார்த்தது
மதுரை: கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு 4 மாதங்கள் சிறை
மதுரை, கூடல்புதூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கூடல்புதூர் பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்த மதுரை ஜெயிந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மு. கார்த்திக் (34), பாசிங்காபுரத்தைச் சேர்ந்த அஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டார்.

தொடர்புடைய செய்தி