மதுரை: இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

69பார்த்தது
மதுரை: இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம், வைகை வடகரையைச் சேர்ந்தவர் கணேசபாண்டியன் (43). கார் ஓட்டுநர். இவர் மதுரை அண்ணாநகர் எல்ஐஜி குடியிருப்பு பகுதியில் அழகுபாண்டி என்பவரின் குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றார். இதனால் தனது இரு சக்கர வாகனத்தை அழகுபாண்டியின் வீட்டின் முன் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த இரு சக்கர வாகனத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த வாகனம் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி