மதுரை: 15 காவல் நிலையங்களின் தரம் உயர்வு

71பார்த்தது
மதுரை: 15 காவல் நிலையங்களின் தரம் உயர்வு
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உதவி ஆய்வாளர் நிலையில் செயல்பட்டு வந்த காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளர் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டன. மதுரை மாவட்ட புகார் பகுதியில் 46 காவல் நிலையங்கள் உள்ளன. இதில், பல காவல் நிலையங்கள், உதவி ஆய்வாளர் தரத்தில் செயல்பட்டு வந்தன. 

இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பின்படி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூர், வில்லூர், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு ஆகிய காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளர் நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டன. இந்த 15 காவல் நிலையங்களுக்கும் விரைவில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவர் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி