மதுரை மாநகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 2,633 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ சரக்கு வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தணிக்கை செய்யப்பட்டு 116 வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 200 கிராம் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாகனத்தணிக்கையின் போது எந்தவிதமான ஆவணங்களும் இல்லாத சந்தேகத்திற்கிடமான 43 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.