மதுரை ஆதீனத்தை சந்தித்த பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு என்றும் கூறினார். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது என்றும், துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன் என்றும், அவருக்கு தோல்வி தான் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும், டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார் என்றும், இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும் என்றும் கூறினார். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார் என்றும், என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தை தூண்ட கூடிய கதாநாயகனே சு. வெங்கடேசன் தான் என்றும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா என்றும், திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.