பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், "மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்தால் அதையும் திறக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், நாங்கள் அவரிடம் பங்கு கேட்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தேமுதிகவிடம் இதுவரை கூட்டணி பேசவில்லை என்றும், சசிகலா புதிய கட்சி தொடங்குவதால் அதிமுக வாக்குகள் பிரியாது என்றும் அவர் கூறினார்.