மதுரை: மகளிர் உரிமைத்தொகை எப்போது? சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேட்டி

0பார்த்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருவதாக கூறினார்.  மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் வழங்குவது குறித்து நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் செய்ய முடியும் என்றும், முதல்வர் தேவையான நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தெரிவித்தார். இது எந்த வெர்ஷனும் கிடையாது, இது புது வெர்ஷன் என்றும் அவர் குறிப்பிட்டார்.