மதுரை: தீராத வயிற்று வலியால் பெண் தற்கொலை

2பார்த்தது
மதுரை: தீராத வயிற்று வலியால் பெண் தற்கொலை
மதுரை, மேலப்பனங்காடியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை (37) என்பவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்காததால் மனமுடைந்த அவர், பிப்ரவரி 20 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பிள்ளை உயிரிழந்தார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.