மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் 4 கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சிவராத்திரி விழாவையொட்டி மங்கல வாத்திய இசை, ஆன்மிகச் சொற்பொழிவு, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் 1,008 சங்குகளைக் கொண்டு யாக பூஜை நடத்தப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.