மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஜன. 11) காலை மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் விதமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.