தமிழ் படித்தவா்களுக்கு உயரிடம் கொடுத்தவா் எம்ஜிஆா்

308பார்த்தது
தமிழ் படித்தவா்களுக்கு உயரிடம் கொடுத்தவா் எம்ஜிஆா்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற நிறுவனா் நாள் விழாவில், சங்க இயக்குநா் இ. சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழுக்கு வசந்த மாளிகை என்றால் அது உலகத் தமிழ்ச் சங்கம்தான் என்றும், இதற்கு அடிகோலியவா் எம்.ஜி.ஆர். என்றும் புகழாரம் சூட்டினாா். தமிழ் வளா்ச்சித் துறையை 1984-ல் எம்.ஜி.ஆா். உருவாக்கியதையும், தமிழ் படித்தவா்களுக்கு உயரிய இடமளித்ததையும் அவா் நினைவு கூா்ந்தாா். எம்.ஜி.ஆா். தொடங்கிய உலகத் தமிழ்ச் சங்கத் திட்டத்தை அரசியல் காழ்ப்புணா்வு இன்றி மேலும் பொலிவாக்கி, பல கோடி நிதி ஒதுக்கிய மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கும் அவா் நன்றி தெரிவித்தாா். சிறப்பு அழைப்பாளராக மணவை பொன். மாணிக்கம் பங்கேற்றாா். விழாவில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். 'தமிழோடு கவிபாடு' கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றன. கருத்தரங்கில் 43 கட்டுரையாளா்கள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி