மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர். பழனிவேல் தியாகராஜன், ஞானஒளிபுரம் பகுதியில் முதல்வர் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டு, மனுதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாமன்ற உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.