மதுரை: முல்லை பெரியார் குடிநீர் திட்டம்; கட்டணம் செலுத்த தேவையில்லை

66பார்த்தது
மதுரை: முல்லை பெரியார் குடிநீர் திட்டம்; கட்டணம் செலுத்த தேவையில்லை
அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளான முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்றுநீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை குடிநீர் பிரதான குழாய் பதித்தல், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மதுரை மாநகராட்சியின் சார்பில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கும், வீட்டு இணைப்புகள் வழங்குவதற்கும் எந்தவிதக் கட்டணமும் பொதுமக்கள் செலுத்த வேண்டியதில்லை. வீட்டு இணைப்புகளுக்கு வைப்புத் தொகை மட்டுமே குடியிருப்புதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். குடிநீர் விநியோகத்திற்குப் பிறகு குடியிருப்புதாரர்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். எனவே குடிநீர் திட்டத்திற்கு யாரேனும் கட்டணம் செலுத்த கோரினால் மாநகராட்சியின் 24 நேர கட்டுப்பாட்டு அறை எண். 7871661787 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ புகார் தெரிவிக்குமாறு மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.