மதுரை மாவட்டம் மேலப்பனங்காடியில் உள்ள அய்யனார், முனியாண்டி சுவாமி, கருப்பசாமி, முத்துமாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடத்த, முத்தரையர், மறவர், ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நபரால் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்றும், இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட நபர், ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒருவரை உறுப்பினராகக் கொண்ட குழுவுடன் இணைந்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார். விழாவில் தனி நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது என்றும், எவ்வித பாகுபாடுமின்றி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.