மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (பிப். 17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, பெண் ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.