சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

269பார்த்தது
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை காலமுறை ஊதியமாக சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 19,500 மற்றும் சமையலர் உதவியாளர், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ. 15,700 வழங்க வேண்டும், மேலும் அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மஞ்சுளா, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மேகலா உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசினர். பெரும்பாலான ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.