மதுபான பாருக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

0பார்த்தது
மதுபான பாருக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
மதுரை மாநகர் வடக்கு கலால்துறையின் கீழ் செயல்பட்ட தத்தனேரி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எண்: 5140-ல், விதிகளை மீறி சட்டவிரோத மது விற்பனை மற்றும் பாருக்குள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரித்ததாக புகார்கள் எழுந்தன. இதன் விளைவாக, நேற்று (மே 15) மாலை மதுரை கலால்துறை உதவி ஆணையர் பச்சைமுத்து, டாஸ்மாக் வடக்கு மேலாளர் ரமேஷ், வடக்கு கோட்ட கலால் அலுவலர் பிரேம் கிஷோர் ஆகியோர் கொண்ட குழுவினர் மதுபான பாருக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி