மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார், திமுக ஆட்சியில் அரசு பள்ளிகள் மூடப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். வீதிகள் தோறும் திறக்கும் சாராயக்கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு, பள்ளிகளை மூடு விழா காண்பதற்கு கண்டும் காணாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த ஆண்டில் மட்டும் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என்றும், எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் அவல நிலைகள் போக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.