மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் எல்எஸ்சி நகரில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா தலைமை தாங்கி, தேர்தல் ஆணையத்தின் எஸ். ஐ. ஆர். பணி மற்றும் பி. எல். ஒ. பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார். திமுகவினர் இந்தப் பணியை சாதகமாகப் பயன்படுத்துவதாகவும், அமைச்சர் மூர்த்தி தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது நிர்வாக சீர்கேடு என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாக முகவர்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்று மக்களுக்கு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.