தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் விஜய்க்கு உண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், மதுரை முழுவதும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பவன் கல்யாண் பாஜக கூட்டணியில் இருப்பதால், இது மீண்டும் கூட்டணியில் மாற்றமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.