மதுரையில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி.

1பார்த்தது
மதுரை நகரில் கடந்த சில தினங்களாக இரவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பகலில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு தப்பித்து வருகின்றனர். நேற்று (மே. 6) இரவு பெய்த மழையால் மதுரை நகரில் ரயில்வே நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் அருகே கீழ ஆவணி மூல வீதி, கார் பார்க்கிங் செல்லும் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you