மதுரையில் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்ய மனு!

761பார்த்தது
மதுரையில் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் பலர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கவிஞர் வைரமுத்து கடவுள் ஸ்ரீராமரை மனநோயாளி என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும் கருத்து பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும், இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீராமரை அவதூறாக சித்தரித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மதப் பிரிவினைகளை உருவாக்குதல், பொது அமைதிக்குக் களங்கம் விளைவித்தல், இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுதல் போன்ற குற்றங்களுக்காக வைரமுத்து மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது.